அசாம்கர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பது, சமீபத்தில் வெளியாகிய வீடியோ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு நோயாளி தரையில் உட்கார்ந்து கொண்டு ஆக்ஸிஜன் முகமூடியுடன் சுவாசிக்கப் போராடுகிறார். அருகிலும், அந்த நோயாளிக்கு உதவ எவரும் இல்லை; அங்கு ஊழியர்களோ, மருத்துவரோ இல்லை என்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
सदर अस्पताल, #आज़मगढ़ का ये वीडियो देखकर आप समझ जाएँगे कि क्यों हर बार चुनाव के पहले धर्म को आगे करते हैं मुखिया जी…!!
इतनी बेहतरीन व्यवस्था है कि मरीज़ ज़मीन पर बैठकर ऑक्सीजन मास्क लगाए हुए है…!! शर्मनाक
सारा खर्चा इन्वेस्टमेंट के प्रस्ताव के प्रचार प्रसार पर होता है, हकीकत… pic.twitter.com/6bjkwk4P69
— Mamta Tripathi (@MamtaTripathi80) July 19, 2025
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம், அங்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் மிக மோசமான நிலைமையே வெளிப்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்கு வந்த பொதுமக்கள், அங்கு மருத்துவ உதவியை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் தெரிவித்த புகாரின்படி, இந்த அரசு மருத்துவமனைக்கு பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டும், சுகாதாரத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த மாவட்ட மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “மருத்துவமனை என்ற பெயரில் கட்டடம் தான் இருக்கிறது, ஆனால் சேவை என்பது எங்கே?” என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
அரசு உடனடியாக தலையிட்டு, தேவையான மருத்துவ பணியாளர்களை நியமித்து, மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தி மக்கள் நம்பிக்கைக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
