திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கிராமப்புற பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில்  தேசிய மகளிர் நல ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்தில் ”கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

அதோடு ”பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து 2022 முதல் 2025 வரை நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி கொடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் கோரிக்கையாக கூறப்பட்டிருந்தது.