கர்நாடகாவில் உள்ள கலபுரகி மாவட்டம் அடுத்துள்ள கிராமத்தில் சரிதா(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள புறநகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவன் பீதரில் டவுன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான சரிதாவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்த சரிதாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று காவேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பக்ரேஷ் மல்லேசப்பா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் ஆவார். இவர் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றி சென்ற போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு உயிரிழந்துவிட்டார். அவர் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் பேருந்தை நிறுத்தியதால் பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர்.