துபாயை சேர்ந்த தொழில்முனைவோரும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநருமான @movlogs, தனது வீட்டில் ‘புதிய அலங்காரம்’ என்ற பெயரில் ஒரு Ferrari போலியைக் தன்னுடைய வீட்டின் ஹாலில் தொங்கவிட்ட வீடியோவால் நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். @edrive.jetcar உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோவில், சிவப்பு நிற ஃபெராரி கார் ஒன்றை ஆட்கள் குழு ஒன்று தூக்கிச் சென்று, வீட்டின் கூரையில் லைட் போல தொங்கவிட்டதாக காணப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியவுடன் பலரும் அதிர்ச்சி மற்றும் சந்தேகத்துடன் பார்த்தனர். Ferrari கார் உண்மையா, அல்லது போலியா என்பதைப் பற்றிய விவாதங்கள் பலம் பிடித்துள்ளன. சில நெட்டிசன்கள், “இது எஞ்சின் இல்லாத டம்மி மாடல் தான். கதவுகள் கூட இல்ல. முழு காரும் ஒற்றைத் துண்டாக தெரிகிறது” என்று விமர்சித்துள்ளனர். மற்றொரு நெட்டிசன், “அது வெறும் ஒரு பிளாஸ்டிக் கட்டுமானம், அதை ஒரு கண்ணாடி மாடலுக்குப் போல் தயாரித்து இருக்காங்க” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், Ferrari விலை $500,000 எனக் கூறப்பட்ட நிலையில், சிலர் “இது வெறும் $50,000 மதிப்புள்ள body kit மாதிரி தான்” என விளக்கம் அளித்துள்ளனர். “அது எதுவாக இருந்தாலும், கூரையில் கார் வைத்திருக்கறார், பூகம்பம் வந்தா இந்த சரவிளக்கு தலையில விழும் போல இருக்கு” என நகைச்சுவையாக விமர்சிக்கும் கமெண்ட்களும் வைரலாகி வருகின்றன. “தனக்கு பிடிச்ச காரை, கம்பளிச்சுட்டு, அது சரவிளக்கு தான் போல ஒரே அழகு” என்று சிலர் பாராட்டியிருக்கின்றனர்.
இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் இதில் கலைமயமான பார்வையை பாராட்ட, மற்றவர்கள் இதனை “தூய பம்ப்!” என்று விமர்சிக்கின்றனர். Ferrari உண்மையானதா? அல்லது மேடை அலங்கார மாடலா? என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், இவ்விதமாக காரை வீட்டின் கூரையில் மாட்டியிருப்பது துபாயின் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை ஒரு முறை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
View this post on Instagram
