தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பாண்டிராஜ் தற்போது “தலைவன் தலைவி” என்ற குடும்ப படத்தை இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையுலகில் வெளியாகயுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.