தாய்லாந்தில் மிகவும் மதிக்கப்படும் பௌத்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மோசடி அந்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மிகவும் மதிக்கப்படும் பௌத்த மத துறவிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறப்படும் பெண் ஒருவரை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அப்பெண் 9 துறவிகளை ஆசை வலையில் வீழ்த்தி அவர்களுடன் உடலுறவு வைத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின் படி, அந்த பெண்ணின் வீட்டில் சோதனை செய்ததில் துறவிகளை மிரட்டி பணம் பறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இவற்றை பயன்படுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 385 மில்லியன் பாட் அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூபாய் 102 கோடி புத்த துறவிகளை மிரட்டி மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலங்களாக துறவிகள் பாலியல் குற்றங்களிலும் போதை பொருள் கடத்தல்களிலும் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தாய்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.