தென் கொரிய சினிமா துறையில் வளர்ந்து வரும் திறமையாளர்களில் ஒருவர் காங் சியோ ஹா(31). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து நடிப்பு மற்றும் சமூக வலைதளங்கள் இரண்டிலுமே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சினிமா துறையில் “ஸ்கூல் கேர்ள் டிடெக்டிவ்”, “ஃப்ளவர்ஸ் ஆஃப் தி பிரைசன்” மற்றும் “நோபடி நோஸ்” போன்ற பிரபலமான நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களாகவே வயிற்றில் புற்றுநோய் இருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தார்.இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது குடும்ப உறவினர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
View this post on Instagram
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் கீழ் உள்ள வாசகத்தில் “என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இவ்வளவு பெரிய வலியை தாங்கிக் கொண்டிருந்தாலும் உன்னை சுற்றி உள்ளவர்களை பற்றி எப்போதும் நீ கவலைப்பட்டுக் கொண்டிருந்தாய்.
பல மாதங்களாக உங்களால் சாப்பிட முடியவில்லை என்றாலும், உங்கள் பணத்தை பயன்படுத்தி எங்கள் உணவுக்கு பணம் செலுத்தினாய். ஒரு உணவை தவிர்க்க ஒருபோதும் என்னை அனுமதிக்கவில்லை. என் தேவதை மிக விரைவில் எங்களை விட்டு சென்று விட்டார்.
வலி நிவாரணிகளால் நீங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டாலும், அது மோசமாக இல்லை என்பதற்கு நீங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்பதாக சொன்னீர்கள். நான் உண்மையிலேயே வெட்கப்படுகிறேன்.
அன்பு சகோதரி, நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டீர்கள் நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் வலியிலிருந்து விடுபட்டவர் ஆகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார்கள்.
