மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அப்போது அவர் வாஜ்பாயுடன், கலைஞர் எடுத்த புகைப்படத்தை காண்பித்து மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றால் திமுகவினர் யார் காலில் வேண்டுமானாலும் விழும்.
திமுகவினர் கூட்டணி வைத்தால் நல்லது.. ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?. பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்த திமுகவிற்கு பேசுவதற்கு என்ன தகுதி உள்ளது. அதிமுகவுக்கு பயமில்லை. அதிமுக தொண்டனையும் யாராலும் பயமுறுத்த முடியாது. சட்டமன்றத்தில் பெண் என்றும் பாராமல் நமது அம்மாவை தாக்கிய திமுக தற்போது நமக்கு சவால் விடுகின்றன.
பாஜகவை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார். இந்த நாட்டையே ஆளும் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் என்ன தவறு உதயநிதிக்கு. திமுக போல் இரட்டை வேடம் போடும் கட்சி அதிமுக கிடையாது. கூட்டணி வைத்து விட்டீர்களே ஆட்சி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் மு.க ஸ்டாலின் இருக்கிறார். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் எங்களுக்கு என்ன பயம். இது எங்கள் கட்சி நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
