அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவினர் பாஜக உடன் கூட்டணி வைக்கும் போது அந்த கட்சி நல்லது. அதுவே அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?
பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுகவிற்கு இது குறித்து பேசுவதற்கு தகுதி உள்ளதா? ஆட்சி அதிகாரம் வேண்டுமெனில் திமுகவினர் யார் காலிலும் தயங்க மாட்டார்கள். ஆனால் பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு கிடையாது.
அதிமுக தொண்டனை கூட யாராலும் பயமுறுத்த முடியாது. பாஜகவுடன் கூட்டணியை பார்த்து ஸ்டாலின் தான் பயப்படுகிறார். பிரதமர் மோடிக்கு வெள்ளை குடை பிடித்து வேந்தர் ஆகிறார் ஸ்டாலின்.
ஒரு நாட்டின் துணை முதலமைச்சர் அந்த நாட்டை ஆளும் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. கேலோ இந்தியா செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமரை அழைத்தனர். வரவேற்பு, ரோடு ஷோ என நடத்தினர்.
ஆனால் தற்போது வேறு மாதிரி கூறுகின்றனர். இரட்டை வேடம் போடும் கட்சி அதிமுக கிடையாது.நாங்கள் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்வோம். கூட்டணி வைத்து விட்டார்களே, ஆட்சி போய்விடுமே என்ற பயத்தில் பேசுகிறார்கள். சட்டமன்றத்திலேயே கூட்டணி குறித்து என்னிடம் கேள்வி கேட்கிறார்கள் அந்த அளவுக்கு பயம் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
