தமிழகத்தில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாக இருந்த அபூபக்கர் சித்திக், முகமது அலி ஆகிய இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர்களை காவல்துறையினர் ஆந்திராவில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இவர்களைக் கடந்த 6 நாட்களாக காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். நேற்று விசாரணை முடிந்து அவர்கள் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் ஆந்திரா காவல் துறையினரும் மத்திய உளவு பிரிவு காவல் துறையினரும் நடத்திய விசாரணையில் பலத்திடுகிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குற்றவாளிகள் இருவரும் அறவியல் பூர்வமான தொழில்நுட்ப யுத்திகளை கையாண்டு கைது செய்தோம். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அபுபக்கர் மூளையாக இருந்துள்ளார். இவர்கள் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே குண்டு வைத்த சம்பவம், சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்த வழக்கு, அத்வானி ரதயாத்திரையின் போது மதுரை திருமங்கலம் அருகே பாலத்தில் குண்டு வெடித்த வழக்கு போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். வெடிகுண்டு தயாரிப்பதில் அபுபக்கர் சித்திக் கைதேர்ந்தவர். அவர் இது குறித்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று சில காலம் பயிற்சி பெற்றுள்ளார். துபாயிலும் மூன்று ஆண்டுகள் தங்கி இருந்து அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். சிறையில் இருந்தபோது காவல்துறை பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு அபுபக்கர் குருநாதர் போல இருந்துள்ளார். இவர்களை மீண்டும் காவலில் வைத்து விசாரிக்கும் போதும் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
