சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

வருகிற 18-ஆம் தேதி கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய அரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது இதேபோல வருகிற 20-ஆம் தேதி தென்காசி, ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.