மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள ராதோகரின் பர்பத்புரா கிராமத்தில் ரீல் உருவாக்கும் போது விஷப்பாம்பு கடித்ததால், பாம்பு பிடிப்பாளரான தீபக் மஹாவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீபக், தனது கழுத்தில் பாம்பை மாட்டி வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவேற்றும் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளில், பர்சுலா பகுதியில் உள்ள சிலிபுரா கிராமத்தில் இருந்து ஒரு பாம்பு இருப்பது குறித்து தகவல் வந்ததைத் தொடர்ந்து தீபக் அங்கு சென்று பாம்பை பிடித்துள்ளார். அதன்பின், தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வரவேண்டியது இருந்ததால், பாம்பை தன் கழுத்தில் மாட்டியபடியே பைக்கில் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
ज़हरीला कोबरा गले में डालकर बाइक चलाना एक सर्पमित्र के लिए घातक साबित हुआ. सांप के डंसने से सर्पमित्र की मौत हो गई. मृत्यु से पहले, जब वह सांप को गले में डालकर घूम रहा था, तब किसी ने उसका वीडियो बना लिया, जो अब तेजी से वायरल हो रहा है.
पूरी ख़बर: https://t.co/2yV9XoDjvX#Cobra… pic.twitter.com/qBedXkFDQG
— AajTak (@aajtak) July 16, 2025
இந்தநிலையில், வழியிலேயே பாம்பு அவரது கையை கடித்துள்ளது. உடனடியாக நண்பரின் உதவியுடன் தீபக் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் அவர் வீடு திரும்பியுள்ளார். ஆனால், அதே இரவில் தீபக்கின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. உடனடியாக மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தீபக் உயிரிழந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவும் போது, அவரது கழுத்தில் பாம்புடன் பைக்கில் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அவர், பாம்பின் வாயை தனது கையால் தொடுவது, பாம்புடன் விளையாடுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த சம்பவம், பாம்பு பிடிக்கும் நிபுணர்களே கூட விஷப்பாம்புகளை சிறிதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கான ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மேலும், பாம்புகளைப் பயன்படுத்தி சினிமா போன்று ரீல்கள் எடுப்பது ஒரு வாழ்க்கை பணத்தில் முடிந்த விபரீதம் என்பதும் இந்த வழக்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
