தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பகுதியில் ஜகுபர் உசேன்(56) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் நெல்லை அருகே உள்ள பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து ஜகுபர் உசேனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி ஜகுபர் உசேனுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ. 15,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
