உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷாம்பி மாவட்டத்தில் ஹெராஜ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஒரு தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுவனும் அந்தத் தோட்டத்திற்கு சென்றார். அந்த சிறுவன் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி நைசாக பேசி அழைத்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான்.
அந்த சிறுமி வீட்டிற்கு சென்றதும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாக உள்ளது சிறுவனை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
