கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிரவீன் ‌(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பிரவீன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு நந்தினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதில் நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஸ்ரீனிவாஸ் என்ற கணவனும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் நந்தினி மற்றும் பிரவீன் இருவரும் பழகி வந்த நிலையில் நாளடைவில் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து கள்ளக்காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் நந்தினியின் கணவனுக்கு தெரிய வந்ததால் அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் நந்தினி பிரவீனுடன் சென்று விட்ட நிலையில் இருவரும் ஆறு மாதங்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்தனர். பின்னர் ஸ்ரீனிவாஸ் தன் மனைவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தன்னுடன் அழைத்தார். ஆனால் நந்தினி அவருடன் செல்ல மறுத்துவிட்ட நிலையில் பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி போலீசர் வழக்கு பதிவு செய்து நந்தினியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தையின் போது மனம் மாறி நந்தினி தன் கணவனுடன் சென்று விட்ட நிலையில் பிரவீன் வேதனையில் இருந்தார். மேலும் கள்ளக்காதலி பிரிந்ததை தாங்க முடியாமல் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வர நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.