அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் பரிதாபத்திற்குரிய இபிஎஸ் திமுகவின் திட்டத்தை விமர்சித்து வருகிறார். மகளிர் உரிமை தொகை தர வேண்டும் என்று இபிஎஸ் நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்த போதே கொடுத்திருக்கலாம்.
ஆனால் அவர் செய்யவில்லை. தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார். ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம். பாஜகவின் சி டீமான விஜயின் தவெக கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
