கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செண்பகராமன்புதூர் அருகே உள்ள பகுதியில் மகேஷ் (20) என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கும் சுசீந்திரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டின் அருகே மகேஷின் உறவினர் வீடு ஒன்று உள்ளது. அங்கு அவர் வரும் போது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
அவ்வபோது சிறுமியை சந்தித்து வந்த மகேஷ் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பக்கத்து கடைக்கு சென்று சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அங்கே வாடகைக்கு வீடு எடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகேசை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட மகேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
