தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு மற்றும் நடிகர் பகத் பாஸில் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணைந்து மாரிசன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசன்னா, ரேணுகா மற்றும் சித்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தற்போது பயத்தின் ட்ரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
