அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தின் பரலியாபர் கிராமத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணிக் அலி என்பவர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதைத் தொடர்ந்து, 40 லிட்டர் பாலை உடலில் ஊற்றி குளித்து, அதனை ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டாடியிருக்கிறார்.
மாணிக் அலியின் மனைவி கடந்த சில மாதங்களாகவே தனது காதலனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இருமுறை காதலனுடன் வீட்டைவிட்டு ஓடியும் இருந்தாராம். ஆனாலும், தனது மகளின் நலனை கருதி மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொண்டிருந்தாராம் மாணிக். அதன்பிறகும் அவர் மனைவி தொடர்ந்தும் காதலனுடன் தொடர்பு வைத்திருப்பதைக் கண்டபின், இறுதியாக சட்டபூர்வமாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார். அதன்படி தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது.
விவாகரத்து கிடைத்ததுடன், “நான் என் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தைச் சந்திக்கிறேன். இது எனக்கு சுதந்திரம். அதைக் கொண்டாடவே பாலில் குளித்தேன்” என மாணிக் அலி தெரிவித்துள்ளார். தற்போதும் அவரது மகள், அவரது மனைவியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவருடைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, பலரும் இது ஒரு தனித்துவமான சம்பவம் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதோ அந்த வீடியோ,
Manik Ali from Assam celebrated his divorce with wife in a way that grabbed much attention.
He bathed in 40 litres of milk soon after his lawyer confirmed to him that the divorce process was complete, as per multiple media reports. pic.twitter.com/RVehKtRYJg
— Vani Mehrotra (@vani_mehrotra) July 13, 2025
