தமிழக வெற்றிக்கழகம் தனது 2ஆவது மாநாடு அறிவிப்பு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முதலில் விக்ரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் பல லட்சக்கணக்கானோர் கூடினர். இதனை அடுத்து கட்சியின் கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக இறங்கிய விஜய் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து நிலைகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தார்.
மேலும் வார்டு பகுதிகளுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகம் தங்களது 2ஆவது மாநாட்டை வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக கட்சி நிர்வாகிகள் திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆதியப் பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த மாநாட்டில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதத்தில் மதுரைக்கு பயணம் மேற்கொள்ள தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மதுரைப் தொகுதியில்தான் விஜய் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் அப்பகுதியில் ஒட்டிய சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்த மாநாடு மதுரையில் இருக்கலாம் என பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
