பொது பாதுகாப்பு சேவைக்காக தங்களை அர்ப்பணித்து கொள்பவர்கள் காவலர்கள். அவர்கள் தங்களது வார விடுமுறையை முறையாக எடுத்துக் கொள்வதற்காக தற்போது புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி செய்யும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த செயலியின் பெயர்”REST” எனப்படும். அந்த செயலியின் மூலம் ஒரு காவலர் வாட விடுமுறையை காவல் ஆய்வாளர் நிராகரித்தால் அது நேரடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த புதிய திட்டத்தை கன்னியாகுமரி காவலர்கள் இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இது தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
