தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறி வருகிறார். நேற்று கூட ஒரு ஆங்கில நாளிதழுக்கு கொடுத்த பட்டியல் அமைச்சரவையில் பங்கு கேட்போம் என்றார்.

ஆனால் அதிமுகவினர் தனித்து தான் ஆட்சி அமைப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறிவரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இடம் இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும். கண்டிப்பாக அடுத்த வருடம் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்றார். மேலும் பாஜக ஒருபுறம் கூட்டணி ஆட்சி என்று கூற அதிமுகவோ தனித்து ஆட்சியமைப்போம் என்கிறார்கள். மேலும் இதனால் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.