பங்களாதேஷ் நாட்டின் காக்ஸ் பஜார் மாவட்டம் உகியா பகுதியில் உள்ள குடுபாலாங் பவர் ஜிம் என்ற உடற்பயிற்சி மையத்தில், இரவு நேரத்தில் ஒரு நபர் திருட முயன்றார். ஜிம்மிற்குள் நுழைந்த அவர், அங்கிருந்த பொருட்களை திருட முயன்றபோது சிக்கிக்கொண்டார். ஆனால் உடனடியாக அந்த இடத்திலிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து தாக்காமல், விதிவிலக்கான ஒரு தண்டனையைத் தேர்வு செய்தனர். அவர் யாரோ ஜிம்முக்கு வந்த புதிய வாடிக்கையாளர் போலவே, அதிக எடைகள் தூக்க வைப்பதும் , புஷ்அப்புகள், ஸ்க்வாட்கள் என முழு உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டார்.
அந்த நபர் அனுபவித்த வேதனையை வீடியோவாக படம் பிடித்தவர்கள், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டதும், அந்த வீடியோ வைரலாக பரவத் தொடங்கியது. வீடியோவில், திருட முயன்ற நபர் வலியுடன், மூச்சுத்திணற பயிற்சி செய்யும் காட்சிகள், பலருக்கு சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின.
View this post on Instagram
“>
ஆனால் இது தொடர்பாக மறுமுக கருத்துகளும் எழுந்துள்ளன. சிலர், “திருட வந்தவனுக்கு இது நியாயமான பாடம்” என பாராட்டினாலும், மற்றொருபக்கம் சிலர், “இது சட்டத்திற்கு எதிரான தண்டனை, இது தவறு” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், தொடர்பாக வழங்கப்பட்ட தண்டனை சரியா அல்லது தவறா? என்ற சமூக, சட்ட விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. தற்போதுவரை, அந்த நபர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டாரா இல்லையா என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், திருட வரலாம், ஆனா ஜிம்மில் திருட வந்தா முழு பைசா வசூலாகும் என்பதுபோல், இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
