ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் கடுமையான வெப்பம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல், பின்லாந்து, ஸ்பீடன் போன்ற நாடுகளிலும் கடந்த ஆண்டுகளை விட தற்போது கடுமையான வெப்பம் நிலவுகிறது. ஸ்பெயின் நாட்டில் 106 டிகிரி வரை வெப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சிஸ் தலைநகர் பாரீசில் 150 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் அருகே உள்ள லிஸ்பனில் 138 டிகிரி வரை வெப்பம் காணப்படுகிறது. இந்த வெப்பநிலையை சமாளிப்பதற்காக இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அவசரநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் காலை 11 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சில நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதோடு அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வங்கிகள் ஆகியவை பகுதி நேரம் மட்டுமே செயல்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள் போன்ற பகுதிகளில் தாகத்தை தீர்ப்பதற்காக தண்ணீர் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெர்மனியில் கடும் வெப்பத்தின் காரணமாக காட்டு தீ உருவாகி பல ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் தீயில் கருகின. மேலும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 நாட்களில் 2300 பேர் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.