ஆந்திர மாநிலம் மடிக்கேரா பொம்மனப்பள்ளி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 170 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில்  கிராமத்தில் இருந்த பொதுமக்கள் வேலையின்மை காரணத்தினால் வறுமையில் வாடி வந்ததால் ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டனர்.

தற்போது கிராமத்தில் குறைந்த மக்களே வசித்து வரும் நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது 5 வகுப்புகளில், 4 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அதில் 3 மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் ஒரே ஒரு மாணவர் மட்டும் பள்ளிக்கு வந்து கல்வி கற்று செல்கிறார். மேலும் பள்ளியில் ஒரு ஆசிரியர் ஒரேயொரு மாணவனுக்கு மட்டும் பாடம் நடத்தி வரும் நிலையில் பள்ளி செயல்பட்டு வருகிறது என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.