
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மார்ஷல் என்ற துறைமுக நகர் அமைந்துள்ளது. அங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு அந்த நகர் முழுவதும் பரவியதால் விமானம், பஸ், ரயில் போன்ற சேவைகள் நிறுத்தப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகளும் சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் 2-வது மிகப்பெரிய விமான நிலையமும் மார்ஷெல் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு காட்டுத்தீ பரவி அந்த விமான நிலையம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் நாட்டை சுற்றியுள்ள ஒரு சில நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த நாட்டின் மேயர் பென்வாய்ட் பாயன் என்பவர் அப்பகுதி மக்களை வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை தீயில் 9 பேர் தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே அந்தப் பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் சிகரெட் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ள நிலையில் 720 தீயணைப்பு துறை வீரர்கள் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மற்றும் நீர் தெளிக்கும் விமானங்கள் மூலம் தொடர்ந்து தீயை அணைக்கும் பணி செயல்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான வீடுகள் பாதுகாக்கப்பட்ட நிலையில் அதனை சுற்றியுள்ள 700 ஹெக்டேர் நிலப்பகுதிகள் தீயில் எறிந்து நாசமாகியது. மேலும் 10 அடுக்கு மாடி கட்டடங்கள் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் பிரான்ஸ் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.