
இன்றைய சமூக ஊடக காலத்தில், ரீல்ஸ் தயாரிப்பது ஒரு கலையாக மட்டுமின்றி, சிலருக்கு வாழ்க்கையின் நோக்கமாகவே மாறிவிட்டது. இதற்காக சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் ஆழ்த்தி கொண்டு ஸ்டண்ட் செய்வதைக் காணலாம். தற்போது இவ்வகை ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஓடும் ரயிலின் கதவிலே நின்று, ஒரு பெண் லிப் சின்க் செய்து ரீல் எடுப்பது தென்படுகிறது. சில நேரங்களில் கேமராவையும், சில நேரங்களில் வெளியையும் பார்த்தபடி ரீல் உருவாக்குகிறாள்.
இந்த நிகழ்வில் சுவாரசியமான திருப்பம் என்னவெனில், பின்னர் அந்த பெண்ணின் அத்தை அந்த இடத்துக்குவந்து, அந்த பெண்ணை ரயிலுக்குள் இழுக்கிறார். ரீலுக்காக உயிரை ஆபத்தில் வாழ்த்தியதை உணர்ந்த அத்தை, உடனே அவளின் தலைமீது பலமுறை அடித்தபடி, “ரீல் என்ற பேயை உடம்பிலிருந்து வெளியே தள்ளுகிறேன்” என்றபடி கடும் கண்டனம் தெரிவிக்கிறார். இந்த வீடியோ, உண்மையில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளதோடு, பலரை சிந்திக்க வைக்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது.
இந்த வீடியோ @prof_desi என்ற X கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது.. இந்த காணொளியின் நேரம், இடம் தெளிவாக தெரியவில்லையென்றாலும், அதில் காட்டப்படும் காட்சி மட்டும் போதுமானது – இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது எவ்வளவு மோசமான முடிவாக முடிக்கக்கூடும் என்பதற்கு உரிய எடுத்துக்காட்டு! ஒரு ரீலுக்காக உயிரை பணயம் வைக்க வேண்டாம் – நியாயமான எல்லைக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.
आंटी ने रील का सारा भूत उतार दिया 🤓🤓 pic.twitter.com/WYea158DEE
— Professor of memes (@prof_desi) July 8, 2025