மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் மண்டுவில் என்ற சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக மருத்துவர் தாஸ் அவரது மனைவி சுஷ்மிதா தாஸூடன் சென்றிருந்தார். இந்நிலையில் சாலையின் ஒரமாக அவர்கள் நின்று கொண்டிருந்த போது திடீரென தெரு நாய் ஒன்று சுஷ்மிதாவின் காலை கடித்தது. உடனடியாக அவரை மருத்துவர் தாஸ் அருகிலிருந்த உள்ளூர் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர் சுஷ்மிதாவை பரிசோதனை செய்யாமலேயே தொலைதூரத்தில் இருக்கும் சுகாதார மையத்திற்கு செல்லும்படி கூறினார். இதைத்தொடர்ந்து மருத்துவர் தாஸ் தனது மனைவியை சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று நிலையில், அங்கு அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

பின்னர் உள்ளூர் சுகாதார நிலையத்தில் நடந்ததை மருத்துவர் தாஸ் வேதனையுடன் பதிவு செய்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரியங் மிஸ்ரா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.  இது தொடர்பாக இந்தூரிலிருந்து ஒரு குழுவை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார். அதன்பின் மருத்துவர் சாந்தினி என்பவர் பணியில் இருந்த போது தம்பதிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மிஸ்ரா கூறும்போது”அரசு நிறுவனம் பள்ளி கல்லூரி சேவை மையம் மருத்துவமனை அல்லது அலுவலகம் என அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு குடிமக்களையும் மரியாதையுடன் நடத்துவது அவசியம். அதோடு குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களுக்கு தேவையான சேவையை வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.