
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 170 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தஹவுர் உசேன் ராணாவை சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவர் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டார். அதன் பின் அவரிடம் கடந்த 18 நாட்களாக தேசிய புலனாய்வு படையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர் பாகிஸ்தானில் எம் பி பி எஸ் படித்ததாகவும், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்ததாகவும் கூறியுள்ளார். அதன் பின் பாகிஸ்தான் ஐஎஸ் அமைப்புக்கு உதவி செய்ய இந்தியா சென்றதாகவும் கூறியுள்ளார். அங்கு பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்ததாகவும், வளைகுடா போரில் தனக்கு பங்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கு, முன்னர் 2 நாட்கள்அங்கு தங்கி இருந்ததாகவும், அப்போது பயங்கரவாதி ஷெட்லியுடன் தொடர்பில் இருந்தேன் என்றும், டெல்லி, புனே, கோவா என பல நகரங்களை சுற்றி வந்து நோட்டம் விட்டதாகவும் கூறியுள்ளார்.