மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்யும் நிலையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் சமீபத்தில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பின்னர் அந்தக் கொள்கையை ஆளும் பாஜக அரசு வாபஸ் பெற்றுவிட்டது.

இந்த சம்பவத்திற்கு ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் உத்தவ் தாக்கரேவுடன் மொழி திணிப்புக்கு எதிராக கைகோர்த்துள்ளார். இதில் MNS கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மராத்தி மொழி பேசாதவர்களை காதுக்கு கீழே அடியுங்கள் எனவும் அதனை வீடியோ எடுக்காதீர்கள் வெளியில் சொல்லாதீர்கள் அப்போதுதான் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள் என்றும் கூறியிருந்தார்.

மராத்தி மொழி பேசாதவர்கள் மீது சமீப காலமாக மகாராஷ்டிராவில் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகிறது. இந்நிலையில் MNS கட்சி துணை தலைவரின் மகன் குடி போதையில் அறை நிர்வாணமாக நடுரோட்டில் காரில் வைத்து ஒரு பெண்ணிடம் துஷ் பிரயோகம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.

அதாவது ஒரு மராத்தி பெண்ணிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோவை அந்த பெண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அதனை சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம் ரீ போஸ்ட் செய்து அந்த கட்சியை கடுமையாக சாடியுள்ளார். அதாவது மராத்தி கலாச்சாரத்தை பாதுகாப்போம் என்று கூறிய அவர்களது உண்மையான முகம் இது தான் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னதாக MNS கட்சித் துணைத் தலைவர் ஜாவித் ஷேக் என்பவரின் மகன் ரஹீல் ஷேக் ஃபுல் போதையில் மேலாடை அணியாமல் காரை ஓட்டி சென்றார். அப்போது ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண் மீது அவரது கார் மோதிய நிலையில் பின்னர் அந்த பெண்ணிடம் அவர் நடந்து கொண்ட விதம்தான் முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருந்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.