
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தசுஹா ஹாஜீபூர் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 17 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களில் 15க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மீட்பு குழுவினர் கிரேன் உதவியுடன் பேருந்தை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.