
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பறவைகள் கூட
உயிரை காப்பாற்றும்
என்பது
ஆச்சரியமாக தான் இருக்கிறது💙💙💙💙💙💙💙💙💙 pic.twitter.com/SCvURPFjUK
— ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) August 15, 2024
அதாவது அந்த வீடியோவில் குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் இருந்த மீன் ஒன்று தெரியாமல் அருகில் உள்ள மணல் தரையில் விழுந்து விட்டது. இதனை அங்கிருந்த கொக்கு ஒன்று பார்த்துவிட்டது. மணல் தரையில் மீன் துள்ளி குதிக்கிறது. இதனை பார்த்த அந்த கொக்கு அதனை தனது வாயால் கவ்வி மீண்டும் குளத்திற்குள் எடுத்துச் சென்று விடுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.