காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்டு அங்கு சென்ற பெண்ணிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி நம்பிக்கை கொடுத்த நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் திருமணம் செய்யுமாறு கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த பிரகாஷ் குமார் அவரை மிரட்டி அடித்திருக்கிறார். இதனால் மன வேதனையடைந்த இளம் பெண் காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 3 ஆண்டுகளும், கட்டாயப்படுத்தி கற்பழித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகளும், பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த காரணத்திற்காக 3 ஆண்டுகளும் மொத்தம் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அபராதத்தை செலுத்த முடியாத பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை நீடிக்கும் என்று தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.