
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா காரில் வெளியே சென்றார்.
அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் செட்டிபுதூர் பகுதியில் வைத்து தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை சாப்பிட்டு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோவை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகிய 3 பேரும் கொடுமைப்படுத்துகின்றனர். இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது. மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உடன்பாடு இல்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ரிதன்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை அழ வைத்த ரிதன்யா கடைசியாக சிரித்த முகத்துடன் புது காரில் செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
அவரது திருமணத்தின்போது எடுத்தபட்ட எடுத்த புகைப்படங்களில் அவர் சிரித்தபடி இருப்பது அவரது கடைசி சிரிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.