தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகள் மூலமாக 2.21 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் நிலையில் விரைவில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளின் விடுமுறை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஜூலை மாதத்தில் மொத்தம் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை. வழக்கம்போல் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. இதனையடுத்து கடைசி 2 ஞாயிற்றுக்கிழமை, மொஹரம் பண்டிகை போன்றவைகளை முன்னிட்டு மொத்தம் 5 நாட்களுக்கு விடுமுறை. மேலும் அதன்படி ஜூலை 4, 6, 11, 20, 27 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் இதனை கணக்கிட்டு முன்கூட்டியே பொருட்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.