
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 73, 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் 9230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் கணிசமான அளவுக்கு குறைந்து ஒரு கிராம் 10069 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80,552 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.