
பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் David Syd Lawrence இன்று உடல்நல குறைவால் காலமானார். இவருக்கு வயது 61. இவர்தான் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முதல் கருப்பின கிரிக்கெட் வீரர் ஆவார். பவுலர் ஆன இவர் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் 625 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவரது மறைவு தற்போது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது மறைவின் காரணமாக இன்று நடைபெறும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளின் போது இரு அணியின் வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.