
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் பசு மாடு ஒன்று கடையின் முன்பு வந்து நிற்கிறது. அதன் பின் கடையின் உரிமையாளரை பார்த்து தலையை, தலையை ஆட்டுகிறது.
Cows are simple & innocent. Mothers ❤️ pic.twitter.com/64f7hSXcOd
— Senāpati Bhakta (@bhaktSenapati) June 16, 2025
இதனை பார்த்த கடையின் உரிமையாளர் மாட்டுக்கு பசிக்கிறது என்று நினைத்து தனது கடையில் இருந்த பிரட் பாக்கெட்டை எடுக்கிறார். அப்போதும் அந்த பசு மாடு தனது தலையை அழகாக ஆட்டுகிறது. இதையடுத்து அவர் அந்த பிரட் பாக்கெட்டை பிரித்து அதிலிருந்து பிரட்டை எடுத்து மாட்டுக்கு உணவளிக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.