ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் சிட்னி ஸ்வீனி. இவர் தான் குளித்த  நீரைக் கொண்டு சோப் ஒன்றை உருவாக்கி அதனை அறிமுகப்படுத்தியுள்ளார். பைன் மரக்கட்டையின் பிசின் உள்பட சில பொருட்களைக் கொண்டு சிட்னி ஸ்வீனி குளிக்கும் போது உடலில் பட்டு வெளியேறும் நீரை சேர்த்து வைக்கப்படுகிறது. அதன் மூலம் உருவாக்கப்பட்ட புதிய சோப்பை அறிமுகப்படுத்தி உள்ளார்.

141 கிராம் எடை கொண்ட இந்த சோப்பின் விலை 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 650 ஆகும். முதற்கட்டமாக ஆன்லைனில் விற்பனைக்கு வந்த 5000 சோப்புகளும் முதல் 5 நிமிடத்திலேயே விற்பனையாகி இருக்கிறது. சிட்னி ஸ்வீனி வாசனையை முகர விரும்பிய சிலர் அந்த சோப்பை போட்டி போட்டு வாங்கி இருக்கிறார்கள். அடுத்தகட்டமாக 5 ஆயிரம் சோப்புகள் விரைவில் வரும் என்ற தகவல் வெளியாக்கியுள்ளது.