ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு 74 வயதாகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இல்லத்தில் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

வாஷிங்டனில் பிறந்த அட்கின்சன் ஆப்பிள் நிறுவனத்திற்கு குயிக் டிரா என்ற மென்பொருளை வடிவமைத்தவர். கிளிக் அம்சத்தை அறிமுகம் செய்ததும் இவர்தான். ஆப்பிள் CEO டிம் குக் அட்கின்சனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.