ஜம்முவை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வாலிபர் நொய்டாவை சேர்ந்த திருமணம் ஆன 40 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகினார். ஒரு விளம்பர படபிடிப்புக்காக டெல்லி கன்னாட்ப்ளேஸ் பகுதிக்கு வருமாறு வாலிபர் அந்த பெண்ணை அழைத்துள்ளார். பின்னர் ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று அந்த பெண்ணுக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.
அதனை சாப்பிட்டவுடன் அந்த பெண் மயங்கி விழுந்தார். உடனே வாலிபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக அவரை புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதனையடுத்து அந்த புகைப்படத்தை காண்பித்து அவ்வபோது பெண்ணை மிரட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். அந்த வாலிபரின் ஜாமீன் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நேற்று நீதிபதிகள் பிவி நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது, புகார் கொடுத்த பெண் தானாக முன்வந்து அந்த வாலிபருடன் சென்றுள்ளார். பிறகு எப்படி டெல்லி போலீஸ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தது? ஒரு கையை தட்டினால் ஓசை வராது.
ஒரு அந்த பெண் ஒரு குழந்தை அல்ல. 40 வயதான பெண். அந்தப் பெண் ஏழு முறை ஜம்முவுக்கு சென்றுள்ளார். கணவரும் கவலைப்படவில்லை. பிறகு ஏன் கற்பழிப்பு வழக்கை பதிவு செய்தீர்கள்? ஒன்பது மாதங்களாக இந்த வாலிபர் சிறையில் இருக்கிறார். இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.
இது இடைக்கால ஜாமீன் வழங்க பொருத்தமான வழக்கு தான். வாலிபர் விசாரணை கோர்ட்டில் ஆஜராக வேண்டும். நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் அளிக்கப்பட வேண்டும். அதை அவர் தவறாக பயன்படுத்தக் கூடாது. அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
