ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் நடைபெற்ற 65 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. பெங்களூர் அணியின் கேப்டன் ராஜத் படிதார் காயம் காரணமாக இம்பேக்ட் வீரராக களம் இறங்கினார். இதனால் ஜித்தேஷ் சர்மாவுக்கு கேப்டன் பிரபு வழங்கப்பட்டது.

இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 94 ரன்கள் வரை குவித்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய பெங்களூரு அணி 19.5 ஓவர்களில் 189 நாட்களில் ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியின் போது ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா 34 ரன்கள் எடுத்த நிலையில் இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதில் அவர் அடித்த சிக்சர் ஒன்று எல்லைக்கோட்டிற்கு அருகே நின்ற ஒரு கார் கண்ணாடியின் மீது பட்டு அந்த கண்ணாடி நொறுங்கியது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.