
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே உள்ள பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் காசிகா(15) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.
நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் காசிகா கணித பாடத்தில் தேர்ச்சி பெறாததால் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் விரத்தியடைந்த அவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்த்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தர்மபுரியை சேர்ந்த சின்னப்பன் மகள் ஸ்ரீமதி, ரமேஷ் மகள் தர்ஷினி, சக்திவேல் மகள் சாய்மதி, விஜயகுமார் மகள் விஜயதர்ஷினி ஆகியோர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து அவர்களை பெற்றோர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.