
சென்னையை அடுத்துள்ள கவுல் பஜாரில் உள்ள அரசு பள்ளியில் பீகாரைச் சேர்ந்த ஜியா குமாரி என்ற பெண் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண் எடுத்து, தமிழில் 93 மதிப்பெண் எடுத்த அசத்தினார். இது தொடர்பாக மாணவி ஜியா குமாரி கூறியதாவது, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக உள்ளது. பள்ளியில் கோச்சிங், ஸ்பெஷல் கிளாஸ் தினமும் உள்ளது. ‘நான் முதல்வன் திட்டம்’ என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய சொந்த ஊர் பீகார், படிப்பிற்காக இங்கு வந்தேன்.
நான் தமிழில் மதிப்பெண்கள் எடுக்க எனக்கு ஆசிரியர் உதவினார்கள். 17 வருடத்திற்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்து ஆரம்பத்தில் தமிழ் படிக்க கடினமாக இருந்தது போகப் போக பழகி விட்டது. 11ஆம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்து நீட் தேர்வு எழுதி டாக்டராக வேண்டும். பீகாரில் Education குறைவாக இருக்கிறதால் இங்கு வந்தோம் என்று கூறினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தமிழ்நாடு- எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார்.