மதுரை மாவட்டத்திலுள்ள நரிமேடு பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜெபராஜ்(23), சுரேந்தர்(23), கணேஷ்ராஜா(23) மற்றும் பனங்காடியை சேர்ந்த ஜான் (23) ஆகிய 4 பேரும் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் நூடுல்ஸ், சிக்கன் ரைஸ், மயோனைஸ் மூலம் தயாரிக்கப்படும் சிக்கன் ஷவர்மா ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து வீட்டுக்குச் சென்ற நிலையில் அனைவருக்கும் அதீத வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பியுள்ளனர். அதன் பின் 4 பேரும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.