இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து முன்னாள் இந்திய ராணுவ தளபதி மனோஜ் நரவனே புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அங்கு போர் நிறுத்தம் தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதாவது இரு நாடுகளுக்கு இடையேயான இந்த தாக்குதலால் எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.

அவர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடுகின்றனர். குறிப்பாக தாக்குதலின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்படும். பாலிவுட் திரைப்படம் போன்று இந்த போர் இருக்காது. இந்த தீவிரமான போர் ரசிப்பதற்கு இல்லை. எனவே தான் நமது பிரதமர் இது போருக்கான காலமல்ல என்று இந்த முடிவை எடுத்துள்ளார்.

சிலர் ஏன் முழுமையான போர் நடத்தப்படவில்லை? என்று கேட்கிறார்கள். அதற்கு நான் ஒரு ராணுவ வீரராக இருந்தால் போருக்கு செல்வதற்கு உத்தரவு கிடைத்தால் நான் செல்வேன். ஆனால் அது என்னுடைய முதல் தேர்வாக இருக்காது. நாடுகளுக்கு மட்டுமல்ல நமது குடும்பங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பில் நாம் அனைவருக்கும் பங்கு உண்டு. எனவே வன்முறை எப்போதும் தீர்வாகாது என்று தெரிவித்தார்.