
பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், கடந்த இரவு பாகிஸ்தான் பல நகரங்களில் இருந்து இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை மேற்கொள்ள முயன்றது.
अमेरिका ने एडवाइजरी जारी कर पाकिस्तान से अपने नागरिकों को लाहौर छोड़ने का निर्देश दिया pic.twitter.com/HRqUMEeJSA
— Priya singh (@priyarajputlive) May 8, 2025
“>
இந்த முயற்சிகளை இந்திய ராணுவம் முற்றிலும் முறியடித்தது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா தனது ‘S-400 சுதர்சன் சக்ரா’ ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் அவந்திபோரா, பதான்கோட், ஜம்மு, மற்றும் பதிண்டா, பூஜ், ஜலந்தர், கபுர்தலா, லூதியானா போன்ற இடங்களில் பாகிஸ்தான் தாக்க முயன்ற நிலையில், அனைத்தும் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேநேரத்தில், பாகிஸ்தானின் நிலைமை மோசமாகும் சூழ்நிலையில், அமெரிக்கா தனது குடிமக்களை பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஆலோசனை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் தங்குமிடங்களுக்குச் செல்லவும், பாதுகாப்பாக இருக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் உலகளாவிய அக்கறையை தூண்டும் வகையில் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு நிலைமை மேலும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.