புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மீனவரான பூவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பூவரசனுக்கு பழக்கம் ஏற்பட்ட கள்ளக்காதலாக மாறியது.

அடிக்கடி பூவரசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று பூவரசன் தனது கள்ளக்காதலின் 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பூவரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.