
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பிரியதர்ஷினி காலனியில் உள்ள ஒரு வீட்டில் கொடூரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. அதாவது 22 வயதான ப்ரதிக்ஷா ஷிஙாரே என்ற பெண் தன் மாமியார் சவிதா ஷிஙாரே (45) என்பவரை கொலை செய்த பிறகு, உடலை மறைத்து விட முயன்றார். ஆனால் அவரது மாமியார் குண்டாக இருந்ததால் அவரால் உடலை தூக்க முடியவில்லை. இதனால் உடலை அப்புறப்படுத்த முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்ட ப்ரதிக்ஷா, தனது மாமியாருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாதம், கடுமையான வன்முறையாக மாறியது. அந்த நேரத்தில் ப்ரதிக்ஷா, தனது மாமியாரின் தலையை சுவரில் மோத வைத்து, பின்னர் சமையல் கத்தியால் குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சவிதாவின் உடலை ஒரு பையில் ஒதுக்கிய ப்ரதிக்ஷா, அதை வெளியே எடுத்து போக முயன்றாலும், உடலின் எடை காரணமாக இயலவில்லை. அதன் காரணமாக, புதன்கிழமை காலை வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர், வீட்டு உரிமையாளர் அந்த பையில் சடலம் இருப்பதை கண்டதும் போலீசாருக்கு தகவல் அளித்தார். பர்பானி பகுதியில் தலைமறைவாக இருந்த ப்ரதிக்ஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆரம்ப விசாரணையில், தலையில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.