பிரதமர் நரேந்திர மோடியால் 2015-16ஆம் வருடம் மூத்த குடிமக்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் மாதம் தோறும் ஒருவருக்கு 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. அடல் பென்ஷன் யோஜனாவின் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலமாக ஓய்வுக்கு பிறகு மாதாந்திர ஓய்வு திட்டத்தை பயனாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். 60 வருடங்களுக்கு பிறகு இந்த திட்டத்தில் டெபாசிட் செய்பவர்கள் ஓய்வூதியம் பெறலாம்.

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 40 வயது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய 60 வயது வரை பணத்தை செலுத்தி சேமிக்க முடியும். 60 வயதுக்கு பிறகு 100 முதல் 5000 வரை பென்ஷன் கிடைக்கும். அதற்கு வங்கி கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மாதம் 76 அல்லது காலாண்டுக்கு 226 அல்லது அரையாண்டு 449 ரூபாய் செலுத்த முடியும்.